என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரேசன் கடை வேலை நிறுத்தம்"
கீழ்வேளூர்:
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன், நாகையில் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கூட்டுறவு துறை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளுக்கு சரியான எடையிலும், கார்டு எண்ணிக்கைகளின் அடிப்படையிலும் பொருட்கள் வழங்கப்படுவது கிடையாது. இதனால் பொதுமக்களுக்கும், ரேஷன் கடை ஊழியர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு சரியான எடையில், ரேஷன் கார்டுகளுக்கு ஏற்ப அத்தியாவசிய பொருட்களை கடைகளுக்கு வழங்க வேண்டும்.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பொது வினியோக திட்டத்திற்கு என தமிழக அரசு தனித்துறை உருவாக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி (திங்கட்கிழமை) தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஒருநாள் கடையடைப்பு மற்றும் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும். எனவே 9-ந் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #Rationshopstrike